நிலா சோறு படைத்தல்

நிலா சோறு படைத்தல்

Update: 2023-02-06 11:03 GMT

சேவூர்

சேவூர் சந்தையப்பாளையத்தில் ஆண்டுதோறும் நிலா சோறு படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தைப்பூசத்தையொட்டி தமிழர் பண்பாட்டு பேரவை சார்பில் நிலா சோறு படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, தொண்மையான நமது கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, சேவூர் சந்தையப்பாளையம் மைய பகுதியில் ஒன்று கூடி திருமஞ்சனத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, பிள்ளையாரை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று ஆடி, பாடி கும்மியடித்தனர். அப்போது அனைத்து நிலைகளிலும் இயற்கை மக்களுக்கு சாதகமான ஒரு நிலையை கொண்டு வர வேண்டும் என வேண்டிக்கொண்டனர். ஜோதிமணி கும்மி பாடல்களை பாடினார். இந்நிகழ்ச்சியில், அவினாசி தமிழர் பண்பாட்டு பேரவை தலைவர் நடராஜன், செயலாளர் வெங்கடாசலம் மற்றும் சேவூர் கிளையின் சார்பில் நடராஜ், வெங்கடாசலம், சேவூர் ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் பொறுப்பாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, கண்ணன், நாகராஜ், வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்