இந்தி திணிப்பை கண்டித்து நாமக்கல்லில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை கண்டித்து நாமக்கல்லில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update:2022-11-05 00:15 IST

இந்தி திணிப்பை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், மாவட்ட பகுத்தறிவாளர் தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய கண சங்க கட்சி தலைவர் முத்துசாமி, பாரதிதாசன் இலக்கிய பேரவை தலைவர் கருப்பண்ணன், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி தலைவர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பு முயற்சியை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் நடராஜன், நகர தலைவர்கள் சரவணன், அறிவாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்