திருப்பூர் வாலிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

Update:2022-11-10 21:13 IST


கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலியான ஜமேஷா முபினின் உறவினரான திருப்பூரை சேர்ந்த வாலிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

முபின் உறவினர்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு என். ஐ. ஏ. (தேசிய புலனாய்வு முகமை) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் திருப்பூரைச் சேர்ந்த முகமது யூசுப் (வயது 37)என்பவரிடம் நேற்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

3 மணிநேரம் விசாரணை

கோவையில் இருந்து வாடகை கார் மூலம் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள முகமது யூசுப் வீட்டுக்கு சென்று அவரை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் அழைத்து வந்து 3 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். முகமது யூசுப்பின் செல்போனை பெற்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் செய்திகள்