முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை

உடன்குடி அருகே முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை;

Update:2022-09-11 19:58 IST

உடன்குடி:

உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 88). ஆடு மேய்க்கும் தொழிலாளி. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் ஆறுமுகம் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் உடன்குடி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆறுமுகம் பிணமாக கிடந்தார். இதுபற்றி திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர். இதுபற்றி குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்