நகராட்சி வரி வசூல் மையம் திறப்பு

அரக்கோணத்தில் நகராட்சி வரி வசூல் மையம் திறக்கப்பட்டது.;

Update:2022-11-04 22:34 IST

அரக்கோணம் பழனிபேட்டை அங்காளம்மன் கோவில் அருகே நகராட்சி சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி செலுத்துவதற்கான வரி வசூல் மையம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் லதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி கலந்து கொண்டு வரி வசூல் மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நகராட்சி என்ஜினியர் ஆசிர்வாதம் வரவேற்றார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர மன்ற குழு தலைவர் துரை சீனிவாசன், கவுன்சிலர்கள் ஜெர்ரி, சரவணன், சுகாதர அலுவலர் மோகன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்