இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் 5-அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;
கன்னியாகுமரி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
கன்னியாகுமரி மக்களை பாஜக நேசிக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும். பாஜகதான் பெண்களுக்கு தனி மதிப்பு கொடுக்கும் கட்சி. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. திமுக - காங்கிரஸ் செய்த தவறுக்கு கணக்கு கூற வேண்டும்- பிரதமர் மோடி
கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழில் தனது பேச்சை தொடங்கினார். சகோதர சகோதரிகளே எனக் கூறி பேசத்தொடங்கிய பிரதமர் மோடி கூறியதாவது:- மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். தி.மு.கவை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சியை அமைப்போம். இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும். நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்” இவ்வாறு கூறினார்.
குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது. மீனவர் நலனில் பாஜக அரசு அக்கறை கொண்டது. 400 தொகுதி வெற்றி என்பது ஒரு வார்த்தை அல்ல அது உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்- அண்ணாமலை
தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
கன்னியாகுமரியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். பா.ஜ.க.வில் ச.ம.க.வை இணைத்த சரத்குமார், ராதிகா ஆகியோரும் பா.ஜ.க.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த விஜயதாரணியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.