நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்;

Update:2022-10-11 00:15 IST

மோகனூர்:

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செயல்பட்டு வருகிறது. இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு என பல்வேறு பிரிவுகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 38 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்று வருகின்றனர்.

இவர்கள் நேற்று காலை கல்லூரி நுழைவுவாயில் அருகே தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்க மண்டல செயலாளர் சம்பத் தலைமையில் வாயிற் முழக்க போராட்டம் நடந்தது. கல்லூரி கிளை தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். எழுத்து தேர்வு முறையை கைவிட்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாநில தகுதித்தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்