புஞ்சைபுளியம்பட்டிபால சாஸ்தா கோவில் ஆண்டு விழா

புஞ்சைபுளியம்பட்டி பால சாஸ்தா கோவில் ஆண்டு விழா நடந்தது.;

Update:2023-01-28 02:52 IST

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி முத்து விநாயகர் கோவிலில் பால சாஸ்தா என அழைக்கப்படும் அய்யப்பனுக்கு தனி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 11-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கலச பூஜையும், இதைத்தொடா்ந்து பஜனையும் நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணிக்கு பால சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து 1 மணிக்கு அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்