கொட்டங்காடு தேவி பத்திர காளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்

கொட்டங்காடு தேவி பத்திர காளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.;

Update:2022-09-15 18:52 IST

உடன்குடி:

உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திர காளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை யானை மீது கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. பின்னர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பல்வேறு அபிஷேகங்களும், பூஜையும் நடந்தது. சிறப்பு பூஜையும், உள்பிரகாரத்தில் அம்மன் சப்பர பவனியும் நடந்தது. 22-ந் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்