தொடர் மழையால் கண்மாய்க்கரை உடைப்பு

தொடர் மழையால் கண்மாய்க்கரை உடைப்பு ஏற்பட்டது.;

Update:2022-11-03 22:04 IST

பரமக்குடி, 

பரமக்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் கட்சி அளிக்கிறது. பரமக்குடி அருகே உள்ள முத்துச்செல்லாபுரத்தில் இருந்து காவனூர் செல்லும் வழியில் உள்ள கண்மாய் நிரம்பி கரையில் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் பொதுப்பணி துறை அதிகாரிகளையும், வருவாய் துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு உடனடியாக கண்மாய் கரையையும், சாலையையும் சீரமைத்து தருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதிகாரிகள் மாலை வரை அப்பகுதிக்கு செல்லவே இல்லை. உடனே அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். உடனே தாசில்தார் தமிம் ராஜா மற்றும் அதிகாரிகள் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்த சாலையை சீரமைத்து கொடுக்குமாறு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன் பேரில் அப்பகுதி மக்கள் பஸ் மறியலை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்