மாற்றுப்பாதைகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி
பேராவூரணி அருகே பாலம் கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்ட இரண்டு மாற்றுப்பாதைகளும் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.;
பேராவூரணி;
பேராவூரணி அருகே பாலம் கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்ட இரண்டு மாற்றுப்பாதைகளும் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பாலப்பணிகள்
பேராவூரணியிலிருந்து பூக்கொல்லை, நாட்டாணிக்கோட்டை, கொரட்டூர், ரெட்டவயல், பெருமகளூர் வழியாக கட்டுமாவடி செல்லும் சாலையில் நாட்டாணிக்கோட்டை, கொரட்டூர் ஆகிய பகுதிகளில் காட்டாற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலங்கள் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமானப்பணி நடைபெறுவதால் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக 2 இடங்களிலும் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக பெய்த மழை காரணமாக மாற்றுப்பாதைகள் சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளிக்கிறது.
சீரமைக்க
இதனால் இந்த வழியாக செல்லும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ- மாணவிகள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். தற்போது .தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே அசம்பாவிதம் நடக்குமுன் மாற்றுப்பாதைகளை முறையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.