மணல்மேடு அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை கண்டித்து மணல்மேடு அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு ஈடுபட்டனர்;

Update:2022-11-09 00:15 IST

மணல்மேடு:

மணல்மேட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள், இந்தி திணிப்பை கண்டித்து வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர் திவாகர் தலைமை தாங்கினார். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்