கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-08-01 23:27 IST

வடகாடு:

வடகாடு அருகே புள்ளான்விடுதி ராங்கியார் கண்மாய் பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த டிராக்டரை டிப்பருடன் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரும், டிரைவருமான நெடுவாசல் குறுவாடி பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்