வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி அரியலூரில் நாளை நடக்கிறது.;
அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் 2 மற்றும் தங்களது சுய விவர குறிப்புகளுடன் நாளை காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். எனவே இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற பழங்குடியின இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.