தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-11-09 00:11 IST

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ஜோசப் கென்னடி தலைமை தாங்கினார்.‌ மாவட்ட பொருளாளர் எழில் இளம்வழுதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை-152 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். 1.7.2022 முதல் வழங்கப்பட வேண்டிய 4 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் சரண் விடுப்பை வழங்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்