கூலி தொழிலாளியை தாக்கியவர் கைது
கூலி தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மகன் வேட்டைக்காரன் (வயது 35), முனுசாமி மகன் மெய்யப்பன் (45). கூலி தொழிலாளர்களான இருவரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு ஒரு கொட்டகையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்யப்பன் வேட்டைக்காரனை திட்டி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து, மெய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.