மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை அருகே சீவலப்பேரி மேலபாலாமடை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் சம்பவத்தன்று மதுபோதையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.