மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-11-08 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள் சாமி என்பவருக்கு சொந்தமான வயல் பகுதியில் நேற்று காலை கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், அழுகிய நிலையில் இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தன. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் ஊருணியும் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அதில் இருந்து வரும் கழிவுகள் தண்ணீரில் கலந்து விடும். அதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள கழிவுகளை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்து கழிவுகளை அகற்றவும், அதை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்