சின்னதாராபுரம் அருகே உள்ள ராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 60). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கால் வலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வலி தாங்க முடியாமல் கடந்த மாதம் 31-ந்தேதி கிருஷ்ணவேணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சின்னதாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.