காரைக்குடி,
காரைக்குடி ரிலையன்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 42). சம்பவத்தன்று சாந்தி விவசாய வேலைகளை கவனிப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்வாசல் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். திருடு போனவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் எனக்கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.