இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
சிவகிரி:
சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் ஜவஹர் நடுநிலைப்பள்ளியிலும், புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. சிவகிரியில் நடைபெற்ற பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 3 மையங்களில் 180 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தொடக்க நிலை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.
சிவகிரியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் ரெகுநாத், செல்வம், முத்துலட்சுமி, வாசுதேவநல்லூரில் சண்முகவேலு, ஜேம்ஸ் ராஜேஸ்வரி, ஜெய்கணேஷ், புளியங்குடியில் தங்கராஜ், காளிராஜ், தனலட்சுமி ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.