உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு தேவிஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு பவளமுத்து விநாயகர், அம்மன், சுடலைமாட சுவாமி, மூலமூர்த்தி பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புரட்டாசி கொடைவிழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டுதல் நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) காலை 6 மணிக்கு யானை மீது கொடிப்பட்ட ஊர்வலம், காலை9 மணிக்கு கொடியேற்றம் நண்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, அம்பாள் உள்பிரகார சப்பர பவனி நடைபெறுகிறது. விழா நாட்களான நாளை(வியாழக்கிழமை) முதல் செப்.22-ந்தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், அம்பாள் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல்சேவை, அன்னதானம், வில்லிசை நடைபெறும். செப்.22-ந்தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். செப்.23-ந்தேதி இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து அம்மன், பவளமுத்து விநாயகர் முக்கிய வீதியுலா நடைபெறும்.