கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி இறந்தார்;

Update:2022-12-20 03:35 IST

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள பொன்னாக்குடியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 21). தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி-வள்ளியூர் இடையே உள்ள வாகைகுளம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று வாந்தி வந்தது. இதனால் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார், தமிழரசன் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்