அண்டை நாடுகளுடன் சமாதானமாக போகும்படி கத்தாருக்கு ஐநா யோசனை

ஐநாவின் பாதுகாப்பு சபை கத்தாரிடம் அதன் அண்டை நாட்டவருடன் சமாதானமாக போகும்படி யோசனை கூறியுள்ளது.;

Update:2017-07-04 03:28 IST
ஐநா சபை

பாதுகாப்பு சபை உறுப்பினர்களை கத்தாரின் அயலுறவு அமைச்சர் அல்-தானி சந்தித்தபோது இவ்வாறு கூறப்பட்டது.

ஐநா பாதுகாப்பு சபையின் தற்போதைய தலைவரான சீனா, “ அமைதிப்பேச்சு மூலம் தொடர்புடைய நாடுகள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியது. அது தவிர வேறு வழியில்லை என்றும் அது கூறியுள்ளது. 

முன்னதாக கத்தார் சவூதியின் தலைமையில் செயல்படும் நாடுகள் தங்களது தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூறும்படி பாதுகாப்பு சபையை கோரியிருந்தது.

கத்தாரின் பிரிட்டிஷ் வழக்கறிஞர்களோ அந்நாட்டிடம் சவூதி உள்ளிட்ட நாடுகள் கோரியவை “சர்வதேச சட்டங்களை அவமரியாதை” செய்வது போல இருக்கின்றன என்றனர்.

”இம்மாதிரியான கோரிக்கைகள் வரலாற்று ரீதியாக போரில்தான் சென்று முடிந்துள்ளன” என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே கத்தார் அண்டை நாடுகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளது. இந்த பதில்கள் பிரச்சினையை தீர்க்க சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக சவூதி வெளியுறவு அமைச்சர் ஜூபேர் தெரிவித்தார். 

வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வரும் ஜெர்மன் அயலுறவு அமைச்சர் கபீரியல் “ஒற்றுமையின்மை வளைகுடா முழுவதையும் பாதித்துவிடும்” என்று கூறியுள்ளார். 

கத்தாரின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் மேலும் தடைகள் விதிக்கப்படுவதோடு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலிலிருந்து கத்தார் நீக்கவும் படலாம் என்று ஐக்கிய அரபு எமிரேட்டின் ரஷ்ய தூதர் கோபாஷ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்