சவுதி நாட்டு அரசரை கடவுளுடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதியவர் வேலை நீக்கம்

சவுதி நாட்டு அரசரை கடவுளுடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதியவர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.;

Update:2017-07-04 12:25 IST

அல் ஜசீரா பத்திரிகையில் ரமலான அல் அன்சி என்னும் கட்டுரையாளர் கடவுளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளை வைத்து சவுதி நாட்டு அரசரை பாராட்டியுள்ளார்.

அதில் அந்த கட்டுரையாளர் அரசரான சல்மானை மிகவும் பொறுமையானவர் மற்றும் ஷ்தீத் அல் இகாப் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு வார்த்தைகளும் கடவுளை குறிக்கும் வார்த்தைகள் என்று கூறப்படுகிறது.

அரசரை புகழ்ந்து கூறுவது சாதரணமான ஒன்று தான் என்றாலும், அதற்காக அரசரை கடவுளுடன் ஒப்பிட்டு கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று எனவும் இதனால் அரசர் சல்மான் அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பத்திரிக்கையின் மீது எதிரான நடவடிக்கையும் பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கை மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்