பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடையை விதித்து உள்ளது.;
நியூயார்க்,
பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருக்கம் கொண்டு உள்ள ஜமாத் உல் அஹார் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்து உள்ளது. சொத்துக்கள் முடக்கப்படுகிறது. பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் நான்கார்ஹார் மாகாணத்தில் இந்த பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. இணையதளத்தின் தகவலின்படி ஜமாத் உல் அஹார் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் தலிபான் பயங்கரவத இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றது. இப்போது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் இந்த பயங்கரவாத இயக்கம் முகமது ஏஜென்சி என அறியப்படுகிறது. இந்திய பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் இணைத்தது.