தேசிய செய்திகள்
ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது - ஆதார் ஆணையம்

ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் கூறியுள்ளது. #Aadhaar #UIDAI
புதுடெல்லி,

ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் கூறியுள்ளது. #Aadhaar  #UIDAI

பள்ளிகள் ஆதார் இல்லையென்று மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது, அவ்வாறு மறுத்தால் அது தவறானது மற்றும் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது கிடையாது என ஆதார் ஆணையம் தெரிவித்தது.
 
மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகள் ஆதாரை கேட்கும் நிலையில் இந்த உத்தரவு மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிம்மதியாக அமைந்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு ஆதார் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆதார் இல்லையென்று சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுத்து விடுகின்றன. ஆதார் அட்டை இல்லை என்பதைக் கூறி மாணவர் சேர்க்கையை மறுக்கக்கூடாது. சட்டப்படி அது தவறானது மற்றும் அந்த செயல் செல்லாது. மாணவர்கள் ஆதார் அட்டையை பெறும் வரையில் மற்ற அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு சேர்க்கையை அனுமதிக்கலாம். பள்ளிகள், உள்ளூர் வங்கிகள், தபால் நிலையங்கள், மாநில கல்வித்துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தலாம். அதன்மூலம் ஆதார் அட்டையை பெறுவது, தவறுகளை நீக்கி சரியான ஆதார் அட்டையைப் பெறுவது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளது. 

குழந்தைகளுக்கு ஆதார் இன்னும் வழங்கப்படவில்லை, அவர்களுடைய பயொமெட்ரிக் தகவல்கள் இன்னும் ஆணையத்தின் தகவல் தரவில் சேர்க்கப்படவில்லை என்றால், ஆதார் விதிகளின்படி அவர்களை சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஆதார் அப்டேட் வசதிகளை செய்து கொடுப்பது பள்ளிகளின் பொறுப்பாகும் என ஆணையம் உறுதி செய்துள்ளது.