தேசிய செய்திகள்
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.
புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்பு, வெங்கையா நாயுடு அமெரிக்கா செல்வது இதுதான் முதல் தடவையாகும். தனது இரண்டு நாள் அமெரிக்க பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார். 

குறிப்பாக சிகாகோவில்  விவேகானந்தர் உரையாற்றியதன் 125-ஆண்டு நினைவாக, ஹிந்து காங்கிரஸ் என்ற அமைப்பு சிகாகோவில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெங்கையா நாயுடு உரையாற்றுகிறார்.