தேசிய செய்திகள்
உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் மோடி

உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. எங்கள் இயக்கத்தில் இளைஞர்கள் உள்ளனர்.  புதிய ஆற்றல், விரைவாக செயல்படுதல், நோக்கத்தோடு இந்தியா முன்னேறுகிறது. 

சிறப்பான போக்குவரத்து,  சிறப்பான வேலைவாய்ப்பையும், உள்கட்டமைப்பையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். பொருளாதாரம், நகர வளர்ச்சி இந்தியாவில் சிறப்பாக உள்ளது.  நாங்கள் 100 ஸ்மார்ட் நகரங்களை கட்டமைத்துள்ளோம்.

சாலைகள், விமானநிலையங்கள், ரயில் பாதைகள், துறைமுகங்கள் வேகமாக அமைத்து வருகிறோம். வியபாரம் செய்வதற்கு இந்தியாவை மிக சிறந்த இடமாக ஆக்கியுள்ளோம்.  மூத்த குடிமக்கள், மகளிர், மாற்று திறனாளிகளின் பாதுகாப்பு அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.