சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'பேட்ட’

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'பேட்ட’ என அறிவிக்கப்பட்டுள்ளது. #Petta
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ரஜினியின் 165-வது படத்துக்கான motion poster இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். பேட்ட படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்,  பாபி சிம்ஹா,  சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.