உலக செய்திகள்
ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் பலி

ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.
துபாய்,

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானில் அடிக்கடி இதுபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 620–க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி 2 பேர் படுகாயம்
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை: மாட்டு கொட்டகை இடிந்து பெண் பலி - 5 வீடுகள் சேதம்
சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். மேலும் 5 வீடுகள் சேதமடைந்தன.
3. மின்சாரம் தாக்கி பெண் பலியான வழக்கில் 5 பேர் மீது வழக்கு
தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி பெண் பலியான வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
4. பால்கனி இடிந்து விழுந்து பெண் பலி: வீட்டின் உரிமையாளர் கைது
வீட்டின் முன்புறம் அமர்ந்து பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. தலையில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
5. அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் பெண் பலி
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் பெண் பலியானார்.