தேசிய செய்திகள்
தேஜாஸ் போர் விமானம் விண்ணில் வைத்து எரிபொருள் நிரப்பும் வீடியோ வெளியிடப்பட்டது

வெள்ளிக்கிழமை இந்திய விமானப்படை டுவிட்டரில் அதன் தேஜாஸ் போர் விமானம் விண்ணில் வைத்து எரிபொருள் நிரப்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி

தேஜாஸ் போர் விமானம் விண்ணில் வைத்து எரிபொருள் நிரப்பும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. ஒரு இணைப்பு மூலம் சோதனை நடத்தப்பட்டது .  இந்திய விமானப் படை, Il-78 டாங்கர் மற்றும் தேஜாஸ் போர் விமானங்களுக்கு இடையே எரிபொருளை நிரப்பும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எரிபொருட்களின் உண்மையான பரிமாற்றமானது  போர்க்களத்திலிருந்து எடுக்கப்பட்ட சோதனைகள் உள்ளடக்கிய ஒன்பது கூடுதல் சோதனைகள் நடைபெறும்.

இந்தியாவின் உள்நாட்டில் கட்டப்பட்ட இலகுரக  போர் விமானங்கள் தேஜாஸ் ஜூலை 2 ம் தேதி தமிழ்நாட்டிலுள்ள சுலுர் விமானப்படை நிலையத்தில் இருந்து சோதனைகள் மேற்கொள்ளபட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானப்படை இதனை செய்து உள்ளது.

#MakingHistory : Glimpses of IAF's LCA first ever midair refueling with an IL-78 MKI tanker. A second Tejas aircraft flying in formation was used to record & observe the exercise closely. pic.twitter.com/TT6S1e60on — Indian Air Force (@IAF_MCC) September 7, 2018