மாநில செய்திகள்
வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.   சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் வெம்பாவூரில் 6 செ.மீ., அரியலூரில் 3 செ.மீ., பெரம்பலூரில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.