மாநில செய்திகள்
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் ராகுல்காந்தி மன்னித்துவிட்டதற்கு நன்றி - பாரதிராஜா

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் ராகுல் காந்தி மன்னித்து விட்டதற்கு நன்றி என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் இயக்குநர் பாரதிராஜா செய்தியார்களிடம் கூறியதாவது:

7 பேர் விடுதலை தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு நன்றி. தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த ஜெயலலிதாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டு, இளமையை இழந்திருக்கிறார்கள். 7 பேரும் சிறையிலேயே வாழ்க்கையை தொலைத்து இருக்கிறார்கள் அவர்களை விடுவிக்கச்சொன்ன காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், சோனியாகாந்திக்கும் நன்றி.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.