மாநில செய்திகள்
7 பேர் விடுதலை தொடர்பாக யாரும் அரசியல் செய்ய வேண்டாம் - பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள்

7 பேர் விடுதலை தொடர்பாக யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #Arputhammal
சென்னை,

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.  இந்த முடிவை ஆளுநருக்கு தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

இந்தநிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமியுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார்.

முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த பின் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்  செய்தியார்களிடம் கூறியதாவது:

முழு நிம்மதியை அளித்துள்ளார் முதல்-அமைச்சர் பழனிசாமி.  அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி.  7 பேர் விடுதலை தொடர்பாக யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.   27 ஆண்டு வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது; பரிந்துரை மீது விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என நம்பிக்கையுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.