தேசிய செய்திகள்
புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை: திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இன்று பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.
புதுச்சேரி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை. 

புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ வேன்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல்-டீசல் விலை தலா 10 காசு உயர்வு பெட்ரோல்- ரூ.89.44; டீசல்- ரூ.78.51
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றும் தலா 10 காசுகள் உயர்ந்தது.
2. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 அதிகரிப்பு பயணிகள் அதிர்ச்சி
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
3. பெட்ரோல்-டீசல் விலை தலா 10 காசு உயர்வு பெட்ரோல் - ரூ.85.41; டீசல் - ரூ.78.10-க்கு விற்பனை
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை நேற்று தலா 10 காசுகள் உயர்ந்தது.
4. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. தினம் தினம் புதிய உச்சத்தை எட்டும் பெட்ரோல், டீசல் விலை :வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை விழி பிதுங்க வைத்துள்ளது.