தேசிய செய்திகள்
தெலுங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி?

தெலுங்கானா மாநிலம் ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஜெகதாலா மாநிலம் குண்டகட்டா  மலைபாதையில் இன்று 50க்கும்  மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 30 பயணிகள் பலியானதாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்தில் கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

/>