கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.

கடந்த 3 மாதங்களாக இங்கிலாந்தில்  20 ஓவர் , ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்டை 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 4-1 என வென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா பறிகொடுத்தது. இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 10 புள்ளிகளை இழந்தாலும் இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தொடர் ஆரம்பத்தில் 97 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.