லிபியாவில் விமான நிலையத்துக்கு அருகே பீரங்கி தாக்குதல்; 4 பேர் பலி

லிபியா தலைநகர் திரிபோலியில் மிடிகா விமானநிலையத்துக்கு அருகே கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மக்கள் பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர்.;

Update:2017-07-06 03:15 IST

திரிபோலி,

கடற்கரை பகுதியில் திடீரென பீரங்கி குண்டு ஒன்று வந்து விழுந்தது. அந்த பீரங்கி குண்டு வெடித்ததில் 2 பெண்கள் மற்றும் 2 சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து லிபியாவின் உள்துறை துணை மந்திரி அப்துல் சலாம் கூறுகையில், ‘‘தலைநகர் திரிபோலியில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும் ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கும் இடையே நடந்த சண்டையின்போது வீசப்பட்ட பீரங்கி குண்டு கடற்கரையில் விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்திவிட்டது’’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்