உலக செய்திகள்
அரசு ரகசிய சட்டத்தை மீறியதாக 2 ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு 7 ஆண்டு சிறை

அரசு ரகசிய சட்டத்தை மீறியதாக 2 ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு மியான்மர் நீதி மன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது.
யங்கூன்

மியான்மரில் 2 ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் சட்டத்தை அரசாங்க இரகசியங்களை  வெளியிட்டதாக  குற்றம் சாட்டி  ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டனர்.

மியான்மரின் யங்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி  ஏய் வின்  அரசாங்க ரகசிய சட்டங்களை மீறி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள்  வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ,( 28)  இரகசிய ஆவணங்களை சேகரித்து உள்ளனர் என கூறினார்."குற்றவாளிகள்  அரசு ரகசிய  சட்ட பிரிவு 3.1 சியை மீறி உள்ளனர் என கூறி அவர்களுக்கு  ஏழு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்தார். டிசம்பர் 12 ல் இருந்து குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் அடைக்கபட்ட காலம்  கருத்தில் கொள்ளப்படும் என கூறி உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள "ராய்ட்டர்ஸ் தலைமை ஆசிரியர்  ஸ்டீபன் ஜே அட்லெர்  "இன்று மியான்மரில் ஒரு சோகமான நாள்,
 ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ  பின்னால் செய்தி ஊடகம் இருக்கும். என கூறி உள்ளார்