உலக செய்திகள்
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி முடிந்ததும் தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை 4 வயது சிறுவன் தூக்கி சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
பிலிப்பைன்ஸ்,

குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது. 

குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் 4-வயது பள்ளி சிறுவன் தன் வகுப்பறையில் தூங்கி கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் ஒரு மாணவன் மட்டும் பள்ளி வகுப்பு அறையில் தூங்கி உள்ளான் அவனை எழுப்பி வீட்டிற்கு போகுமாறு அவனின் ஆசிரியர் கூறியுள்ளார்.

அவனும் தூக்க கலக்கத்தில் பையை எடுத்து செல்வதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியின் கைப்பிடியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர். சிறுவனின் இந்த செயல் வேடிக்கை வீடியோவாக வைரல் ஆகி இருக்கிறது. 

ஆனால் இது வேடிக்கை அல்ல, வேதனை, குழந்தைகளுக்கு சீரான தூக்கம் என்பது தேவை. குழந்தைகள் எந்த அளவிற்கு நிம்மதியாக தூங்குகின்றனரோ, அந்த அளவிற்கு அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் என ஆய்வு கூறுகிறது.