உலகைச் சுற்றி...

* பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதால் அமெரிக்கா, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு திரும்பிவர வேண்டும் என்று பசிபிக் நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2018-09-07 23:00 GMT
* அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிர் இழந்தனர். உயிர் இழந்தவர்களில் ஒருவர் இந்தியர் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அவரது பெயர் பிருத்விராஜ் கண்டேபி (வயது 29) என்றும், அவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* மெக்சிகோவின் வெராகுருஸ் மாகாணத்தில் 32 புதைகுழிகளில் இருந்து 166 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதே போல் கடந்த 2017–ம் ஆண்டு மார்ச் மாதம் அதே பகுதியில் பல புதைகுழிகளில் இருந்து சுமார் 250 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

* ஈக்குவடார் நாட்டில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் தலைநகர் கியூடோ மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களை கடுமையாக உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் காயம் அடைந்ததாக தெரிகிறது.

* ஜப்பானை நேற்று முன்தினம் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. 26 பேரை காணவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்