உலக செய்திகள்
குழந்தை பெற்று கொள்ள மறுத்த 27 வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்

ரஷ்யாவில் 87 வயதுடைய நடிகர் 27 வயது மனைவி குழந்தை பெற்று கொள்ள மறுத்ததால், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவன் க்ராஸ்கோ (87). கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா க்ராஸ்கோ  (27) என்ற பெண்ணை தன்னுடைய 84 வயதில் திருமணம் செய்து கொண்டார். அப்போது அந்த பெண்ணிற்கு 24 வயது. தன்னை விட 60 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் நடாலியாவை விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நடாலியா  அவருடன் உறவு வைத்து கொள்ள மறுப்பதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இவன் க்ராஸ்கோ  கூறுகையில், அவள் உறவு வைத்து கொண்டால், குழந்தை பிறக்கும் எனவும், பிறக்கும் குழந்தையை பார்த்து கொள்வதற்கு போதிய அளவு பணம் இல்லை, சொந்த வீடு இல்லை போன்ற காரணங்களால் பயப்படுகிறாரோ என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது.

நடாலியாவுடன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்போது அது இல்லை. விவாகரத்து செய்வதே நல்லது என்று முடிவெடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இவன் க்ராஸ்கோ ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ளதால் அவருக்கு 3 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்னர் தான் இவர் தாத்தா ஆனார். மேலும் 27 வயதான நடாலியா  ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்ததால், தன்னுடைய குழந்தைகளுக்கும் அது போன்ற சூழ்நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.