உலக செய்திகள்
தெற்கு சூடானில் ஏரியில் விமானம் விழுந்து விபத்து: 17 பேர் பலி

தெற்கு சூடான் நாட்டின் தலைநகர் ஜூபா. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம், பயணிகளை ஏற்றிக் கொண்டு, யிரோல் நகருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.
ஜூபா,
 
விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அந்த விமானம் அங்கு  உள்ள ஒரு ஏரியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பின்னர் தெரிய வந்தது.

இந்த விபத்தில் 17 பயணிகள் பலியாகி விட்டனர். அவர்களது உடல்கள், ஏரியில் இருந்து மீட்கப்பட்டு விட்டன.

 6 வயது குழந்தை உள்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஐரோப்பியரான ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்