உலக செய்திகள்
மத்திய நைஜீரியாவில் வாயு குடோன் வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

மத்திய நைஜீரியாவில் வாயு குடோன் வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
வர்ரி,மத்திய நைஜீரியாவில் லபியா பகுதியில் வாயு குடோன் ஒன்று அமைந்துள்ளது.  திடீரென இது வெடித்து சிதறியதில் வாகனங்கள் பல தீப்பிடித்து எரிந்தன.  இதுபற்றி டாக்சி ஓட்டுநர் யாகூபூ சார்லஸ் என்பவர் கூறும்பொழுது, இந்த சம்பவத்தில் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து போயின.  தீயில் சிக்கிய நபர்களை வெளியேற்றுவதற்கு உதவிகளை செய்தேன் என கூறியுள்ளார்.இந்த சம்பவத்தினை நைஜீரிய காவல் துறை உறுதி செய்துள்ளது.  ஆனால் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க மறுத்து விட்டனர்.நைஜீரியாவின் நகரங்களில் பலர் சிறிய வாயு குடோன்களை இயக்கும் டீலர்களாக உள்ளனர்.  ஆனால் அவர்கள் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.  இதனால் அங்கு குடோன்கள் வெடிக்கும் சம்பவம் தொடருகிறது.  கடந்த ஜனவரியில் லாகோஸ் நகரில் இதுபோன்று குடோன் ஒன்று வெடித்ததில் 10 பேர் பலியாகினர்.