பாகிஸ்தானில் ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன்- கார்கள் இறக்குமதி செய்ய தடை?

பாகிஸ்தானில் இனி ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான்.

Update: 2018-09-11 07:13 GMT
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் இனி ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது அங்கு புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் இம்ரான் கான் பதவியேற்றார்.

இந்த நிலையில் தற்போது இம்ரான் கான் சில அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். ராணுவத்தின் ஆதரவு இருப்பதால் இன்னும் நிறைய அதிரடிகளை  செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான நடவடிக்கைகளை செய்து வருகிறார். அதன்படி முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார். அதன்பின் தேவையில்லாத சொகுசு ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்ப்பேன் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இது போல அரசு சம்பந்தமான பல ஆடம்பர பராமரியங்களை தடை செய்தார்.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்வதை தடைசெய்ய பாகிஸ்தான் பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். இதன்படி இனி பாகிஸ்தானில் உற்பத்தி ஆகும் செல்போன்களை மட்டுமே வாங்க முடியும். 1 வருடம் இந்த தடை நீடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சொகுசு கார், பாலாடைக்கட்டி, வெண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் தடை செய்யப்படலாம்.

பாகிஸ்தானில் தற்போது பொருளாதார தட்டுப்பாடு நிலவுகிறது. அவர்களிடம் டாலர் கையிருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இன்னும் அதிக டாலர்களை இழக்க நேரிடும். இது இன்னும் அந்த நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும். இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 முதலில் இதற்காக சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானை கடனாளியாக்க விரும்ப மாட்டேன் என்று இம்ரான் கான் கூறியுள்ளார். இதையடுத்தே தற்போது அங்கு ஸ்மார்ட்போன் இறக்குமதியை தடை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்