உலக செய்திகள்
83 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - கொலை சிறுவன் கைது

அமெரிக்காவில் 83 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.

அமெரிக்காவில் 83 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார் டோரதி நீல்  என்ற 83 வயது பாட்டி. இவர், சில நாட்களாக குடியிருப்பை விட்டு வெளியே வராததையடுத்து, அருகில் வசிப்பவர்கள் இவரது வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது இறந்துகிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதே குடியிருப்பை சேர்ந்த டைரோன் ஹார்வின்  என்ற 14 வயது சிறுவன் இப்பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்தது. சிறுவனின் இந்த வெறிச்செயல் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் தனது மகன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றசாட்டினை முறையாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது, இச்சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் இவனுக்கு ஜாமீன் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, இச்சிறுவன் செய்துள்ளது தீவிர ஆபத்தான குற்றம் ஆகும். இதுபோன்று குற்றங்கள் சிறுவர்களுக்கு தவறான முன்னுதாரணம் எனக்கூறி சிறுவனுக்கு ஜாமீன் வழக்க மறுத்துவிட்டார்.