உலக செய்திகள்
இதை நாய் சாப்பிடுமா? ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் வழங்கப்பட்ட முந்திரியால் இலங்கை அதிபர் சிறிசேனா கோபம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் வழங்கப்பட்ட முந்திரியால் கோபம் அடைந்த சிறிசேனா, இதை நாய் சாப்பிடுமா? என கேள்வியெழுப்பியுள்ளார். இதனையடுத்து முந்திரி வழங்குவதை ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது.

கொழும்பு,


முந்திரி வழங்கிய விவகாரத்தினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிபரின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

தெற்கு ஸ்ரீலங்காவில் திங்களன்று அதிபர் சிறிசேனா விவசாயிகள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில், “கடந்த வாரம் நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்தேன். அப்போது முந்திரி வழங்கப்பட்டது, அதனை  நாய்கூட சாப்பிடாது. இதனை கொள்முதல் செய்தவற்கு யார் அனுமதித்தார்கள்? என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நட்ஸ்களை வழங்குவதை நிறுத்தியுள்ளது. துபாயை சேர்ந்த முந்திரி வழங்குநரை மாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே ஊழல் சர்ச்சையில் சிக்கியது, இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.