தேசிய செய்திகள்
ஆப்பிள் ஐபோன்களில் புதிய மாடல்கள் அறிமுகம்!!

ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. #iPhoneXS
கலிபோர்னியா,

உலகின் முக்கிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஆப்பிள், பல்வேறு விலைகளில் அதிக மாடல்களில் ஐபோனை விற்பனை செய்து வருகிறது. 

இந்தநிலையில்,  கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உள்ளிட்ட அடுத்த படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் வரும் 3 ஐபோன்களில் டூயல் சிம் பயன்படுத்திக்கொள்ளலாம். பட்ஜெட் ஐபோனாக கருதப்படும் ஐபோன் 10R ஒரே ஒரு பின்புற கேமராவுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் ஐபோன்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்,  வெவ்வேறு அளவுகளிலும் பெயர்களிலும் பல மொபைல்கள் புதுவரவாக வரவிருக்கின்றன.  விலை குறைவான ஐபோன் மாடலாக iPhone XR வெளியாகும் என்று தெரிகிறது. 

தவிர, ஐபோன் XS (iPhone XS), ஐபோன் XR (iPhone XR), ஐபோன் XR மேக்ஸ் (iPhone XR Max) ஆகிய மொபைல்களும் அறிமுகம் செய்யப்படும். புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4  எனவும் கூறப்படுகிறது. 

ஐபோன் XS 5.8 இன்ஞ்ச், ஐபோன் XS மேக்ஸ் 6.5 இன்ஞ்ச் அளவில் திரையைக் கொண்டிருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

ஐபோன் Xs மேக்ஸ் மாடலில் இதுவரை வெளியானதில் பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ஐபோன்களில் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 9 (iPhone 9) மொபைல்தான் விலை குறைவான ஐபோன் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. 

புதிய ஐபோன் XS மாடலில் உள்ள அம்சங்கள்

புதிய ஐபோன் Xs மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.

5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க ஐபோன் XS மாடலில் 12 எம்பி டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இவை ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப்செட் உதவியுடன் சிறப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகிய செல்ஃபிக்களை எடுக்க முன்பக்கம் 7 எம்பி ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

ஐபோன் XS மாடலின் பேட்டரி முந்தைய மாடலை விட அதிக பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோனில் முதல் முறையாக டி.எஸ்.டி.எஸ். (டூயல் சிம், டூயல் ஸ்டான்ட்-பை) எனும் தொழில்நுட்பம் மூலம் டூயல் சிம் வசதி வழங்கப்படுகிறது. 

இத்துடன் புதிய ஐபோன் Xs சீரிஸ் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.