இந்தியா எங்களுக்கு உதவிகரமாக செயல்படுகிறது - ருவன் விஜேவர்த்தனே

இந்தியா எங்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்படுகிறது என இலங்கை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே கூறியுள்ளார்.

Update: 2019-04-25 13:41 GMT
இலங்கை தாக்குதல் தொடர்பாக இந்தியா மூன்று முறை எச்சரித்தும், இலங்கை அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காத காரணத்தினால் பெரும் துரதிஷ்டவசமான சம்பவம் ஞாயிறு அன்று நடந்தது. ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 350க்கும் அதிகமானோர் பலியாகினர். தொடர்ந்து அங்குள்ள நிலையை இந்தியா கண்காணிக்கிறது. எச்சரிக்கையை விடுத்தும் வருகிறது.

இந்நிலையில்  இந்தியா எங்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்படுகிறது என இலங்கை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே கூறியுள்ளார். எங்களுக்கு விசாரணைக்கும் இந்தியா உதவுகிறது. எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்து, தகவல்களை தெரிவித்து வருகிறது. நாங்கள் எங்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்படும்போதும் அண்டைய நாடான இந்தியாவையே எதிர்நோக்குகிறோம் என கூறியுள்ளார். 

இதற்கிடையே, உளவுத்துறை மாபெரும் தோல்வி அடைந்திருப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

இதுகுறித்து ராணுவ துணை மந்திரி ருவன் விஜேவர்த்தனே கூறுகையில், ‘‘தாக்குதல் நடக்கப்போவதை கடந்த 4–ந் தேதியே இந்திய உளவு அமைப்பு தெரிவித்தது. இந்த தகவல், சரியான நபர்களிடம் பகிரப்பட்டு இருந்தால், இந்த குண்டுவெடிப்பை தவிர்த்து இருக்கலாம் அல்லது தாக்குதலின் வீரியத்தை குறைத்து இருக்கலாம். எனவே, இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்